மதுரையில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்…
மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், சர்வதேச மகளிர் தின மனிதச் சங்கிலி இயக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது.
மதுரையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு சங்கத்தின் மாவட்டத்தலைவர் இரா. தமிழ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆனந்தவள்ளி, பஞ்சவர்ணம், தேன்மொழி, அனிதா, ராஜேஸ்வரி, விசாலாட்சி, சகாயடெய்சி, சகாயசாந்தி, கலையரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெண்ணுரிமை காத்தல், பாலின சமத்துவம், அரசு அலுவலகங்களில் பாலியல் தடுப்புக்குழு ஏற்படுத்துதல், மாதவிடாய் காலத்தில் சிறப்பு அனுமதி விடுப்பு வழங்குதல், தொகுப்பூதிய பெண் ஊழி யர்களுக்கும் மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் வழங்குதல் என் பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலர் ஜெசி, மாவட் டச் செயலர் சந்திரபோஸ், முன் னாள் மாநிலத் துணைத் தலை வர் மொ.ஞானத்தம்பி, மாநிலச் செயலர் நீதிராஜா ஆகியோர் பேசினர்.
நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, மகளிர் துணைக் குழு அமைப்பாளர் ரம்யா வரவேற்றார். மாவட்ட மகளிர் அணி துணைக் குழு உறுப்பினர் சுஜாதா நன்றி கூறினார்.