கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
கால்நடைகளின் நலம் காக்கும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வேலப்ப கவுண்டம்பாளையம் அருள்மிகு மாதேஸ்வரர் மற்றும் மாதேஸ்வரி திருக்கோவில் முதலாம் ஆண்டு நிறைவு விழா….
வேள்வி பூஜை மற்றும் மகா அபிஷேகத்தோடு கோலாகல கொண்டாட்டம் ஏராளமானோர் சாமி தரிசனம்….
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பணிக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வேலப்ப கவுண்டம்பாளையம் கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சடையன் சித்தர் அருள்மிகு மாதேஸ்வரர் மாதேஸ்வரி திருக்கோவில் அமைந்துள்ளது.
கால்நடைகளின் நலன்கார்க்கும் தளமாகவும் இன்னல்களோடு திருக்கோவிலுக்கு வருகை தந்து பத்து நாட்கள் சடையன் சித்தரை வழிபட்டு விபூதி இட்டால் இன்னல்கள் தீரும் என்பது திருக்கோவிலின் ஐதீகமாக கருதப்படுகிறது. திருக்கோவிலில் அருள்மிகு மாப்பிள்ளை விநாயகர், அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத கல்யாணசுப்பிரமணியர் அருள்மிகு சொர்ண ஆகாசன பைரவர் அருள்மிகு சண்டிகேஸ்வரர் ஒரே இடத்தில் அருள் பலிக்கின்றனர்
இத்திருக்கோவில் கடந்த ஆண்டு திரு கூட நன்னீராட்டு விழா நடத்தப்பட்ட நிலையில் அதன் முதலாம் ஆண்டு நிறைவு வழிபாடு இன்று நடைபெற்றது. பேரூர் ஆதீனம் குரு மகா சன்னிதானம். தமிழ் நெறி அருட் செம்மல் சாந்தலிங்கம் வருதாசன் அடிகளார் அவர்களின் தலைமையில், தென்சேரி மலை ஆதீனம் திருநாவுக்கரசு நந்தவனத் திரு மடம் திரு பெருந்திரு முத்து சிவராம சாமி அடிகளார் முன்னிலையில் தீர்த்த குடங்கள் எடுத்துவரப்பட்டு, வேள்வி பூஜைகள் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக சிவ வாத்தியங்கள் முழங்க நிறைய ஆகுது திருமுறை விண்ணப்பம் பாடப்பட்டு மாதேஸ்வரர் மற்றும் மாதேஸ்வரி மூலவருக்கு மகா அபிஷேகமும் கலச நீராட்டலும் நடந்தது விழாவின் இறுதியாக திருநீற்று பிரசாதத்தோடு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.