பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் பெண்களின் மகத்துவத்தை மனதார உணர்வோம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் மகளிர் தின வாழ்த்துச் செய்தி
பெண்ணின் பெருந்தக்க யாவுள என்பது வள்ளுவன் வாக்கு.பணிவு, துணிவு, பண்பு, அன்பு, பாசம், ஒழுக்கம், கனிவு, கோபம், வருத்தம், தயக்கம், கூச்சம், அச்சம், தாய்மை என இவைகள் அனைத்தும் கொண்டவர்கள் பெண்கள்.’பெண் இன்றி பெருமையும் இல்லை கண் இன்றி காட்சியும் இல்லை’ என்பது மூத்தோர் சொல்.
பெண்களை ஒரு தளவாடப் பொருள் போல் கருதப்பட்ட காலத்தில் தனது பணிகளை தொடங்கிய இறைத்தூதர் நபிகளார் பெண்களின் கண்ணியத்தை உயர்த்தி உரிமைகளை உறுதி செய்தார்கள். பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்பதை சட்டமாக்கினார்கள் நபிகளார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு கடும் தண்டனைகளை விதித்தார்கள் நபிகளார். ‘அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை’ என்று கணவன் மனைவியை வர்ணித்து சமத்துவத்தை நிலைநாட்டியது திருக்குர்ஆன்.
மகளிர் தினம் என்பது ஒரு சடங்காக அல்லாமல் அது ஒரு மாற்றத்தின் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்பதே எனது பேரவா.
அனைத்து துறைகளிலும் தற்போது மகளிர் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தாலும் இன்னும் கூடுதல் முனைப்பு தேவை என்பதே நிதர்சனம்.
பெண்களின் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக எழுத்தளவில் இல்லாமல் களத்திலும் செயலாற்றுவோம்.
பெண்களின் மகத்துவத்தை மனதார உணர்ந்தவர்களாக பெண்ணியம் காக்க இந்த மகளிர் தின நாளில் உறுதி ஏற்போம்.
மகளிர் தின வாழ்த்துக்கள்.
அன்புடன்
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்