தஞ்சாவூர் மாவட்டம் :கும்பகோணம் ;தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிகத்திற்கு வழங்க வேண்டிய 2152 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இதனை எதிர்த்து தமிழக அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழக சிவ சேனா கட்சி மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது..சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது.:மும்மொழி கொள்கைக்கு சிவ சேனா ஆதரவு தெரிகிறது.

சிவ சேனா கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர் பி . ரமேஷ் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஜி மற்றும் விவசாய அணி மாநில தலைவர் ஜி கே நாகராஜ் ஆகியோரை சந்தித்து மும்மொழிக் கொள்கைக்கு எங்கள் ஆதரவை தெரிவித்து சிவசேனா கட்சி சார்பாக கடிதத்தை வழங்கினோம் உடன். திருப்பூர் மாவட்டத் துணைத் தலைவர். டி சந்தனகுமார்… திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர். ஓ கண்ணன்… திருப்பூர் கிழக்கு மாவட்ட விவசாய தலைவர்
பி வேனுஜன்.. தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் மரியன் மற்றும் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்..

Share this to your Friends