பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட ஆலம்பாடி சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளியான, அப்பாய் நர்சரி பிரைமரி பள்ளியின் 13-வது ஆண்டுவிழா இன்று (07.03.2025) நடைபெற்றது, நிகழ்ச்சியானது பள்ளியின் தாளாளர் வரதராஜன் தலைமையில், பள்ளியின் செயலாளர் செயலாளர் செளமியா வரதராஜன் முன்னிலையில் நடைபெற்றது,
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் நகராட்சி ஆணையர் இராமர் பங்கேற்று கல்வியின் அவசியம், கைப்பேசியால் வரும் விளைவு உள்ளிட்டவைகள் குறித்து சிறப்புரையாற்றினார்,
இந்த ஆண்டுவிழா நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் செயல்பட்டனர், நிகழ்வில் குழந்தைகள் நடனம், நாடகம், என பல்வேறு கலைநிகழ்ச்சிகளால் வியக்க வைத்தனர், நிகழ்வில் பள்ளியின் ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.