திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்,
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் மற்றும் பேட்டியளித்தார்.
10 துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்பு…
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் தற்போது ஈடுபட்டு வருகிறார்
இத்தகைய ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை நகர்ப்புற வளர்ச்சித்துறை சுகாதாரத்துறை மின்வாரியம், தீயணைப்பு மீட்பு பணித்துறை உள்ளிட்ட 10 துறைகள் சார்ந்த அரசுத்துறை அலுவலர்கள் , உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களையும் மற்றும் அரசு கொண்டு வரும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கப்பட்டது
இதில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா , மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் , , நாகை பாராளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் திருவாரூர் பூண்டி கே.கலைவாணன், திருத்துறைப்பூண்டி க. மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் நிதி பகிர்வில் பாரபட்சம் போன்ற பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில் இதனை திசை திருப்புவதற்காக டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் குடோன்களில் தனது ஏஜென்ட் ஆன அமலாக்க துறை மூலம் சோதனை நடத்தி பிரச்சனையை திசை திருப்புவதற்கு முயன்று வருகிறது. மேலும் நீட் தேர்வுக்காக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் திமுக சார்பில் பெறப்பட்டபோது பள்ளி மாணவர்களை தவிர்த்துதான் ஒரு கோடி கையெழுத்து பெறப்பட்டது
ஆனால் பாஜக மிஸ்டு கால் மூலம் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கை என்று கூறினர். கோடி உறுப்பினர் சேர்க்கை என்று அறிவித்தனர் தற்போது மும்மொழிகொள்கைக்காக பள்ளி சிறு குழந்தைகளிடம் கூட கையெழுத்து இயக்கத்தை பெற்று வருகின்றனர்.