அரசு துவக்கப்பள்ளி யில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி….
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் யா.ஒத்தக்கடை தொடக்கப்பள்ளியில், ஒத்தக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார். அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அமுதா, முதல் நிலைக் காவலர் பாண்டிச் செல்வி, மதுரை சமூக அறிவியல் கல்லூரி மாணவர்கள் பிரியா, நித்திஸ் குழந்தைகள் பாதுகாப்பு எண்கள், நல்ல தொடுதல் கெட்ட தொடுதல், குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தை திருமணம் குறித்து மாணவர் களுக்கு விளக்கினர்
மாணவர்களிடையே கேள்விகள் கேட்டு பதில் அளித்த குழந்தை களுக்கு் பரிசுகள் வழங்கினர். ஆசிரியர் மோசஸ் நன்றி கூறினார். ஆசிரியர் பானு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.