தேனிமாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள லட்சுமிபுரம் தனியார் மண்டபத்தில் இந்திய மருத்துவ கழக 2025ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் மருத்துவ கழக கம்பம் பள்ளத்தாக்கு கிளை புதிய தலைவராக டாக்டர் ராஜ்குமார் பதவியேற்றுக்கொண்டார். செயலாளராக டாக்டர் D.அனுபமா, மற்றும் பொருளாளராக டாக்டர் ஜெய்கணேஷ், கட்டிட செயலாளராக டாக்டர் சுகுமார், ஆலோசனை குழு தலைவராக டாக்டர் பாண்டியராஜ் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் MP, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் முத்துசித்ரா, மற்றும் இந்திய மருத்துவ கழக கம்பம் பள்ளத்தாக்கு கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.