அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக்கூட கட்டிடம் கட்ட பூமி பூஜை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றுள்ளது இந்த நிகழ்ச்சிக்கு சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
இதில் திமுக ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பரந்தாமன், நகரச் செயலாளர் ரகுபதி, பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரிகோவிந்தராஜ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், அருண்குமார், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்டத் துணை அமைப்பாளர் பிரதாப்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தனகருப்பு, மாணவரணி அமைப்பாளர் யோகேஷ், சோழவந்தான் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தண்டலை தவசதீஸ், கோட்டைமேடு ராஜாஜி, பொறியாளர் அணி பாலகிருஷ்ணன், உட்பட ஆசிரியர்கள் ஒப்பந்ததாரர் கலந்து கொண்டனர்.