கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மேலாண்மை துறை முதுகலை சார்பாக ஹை கிரசன்டோ நிகழ்வு நடைபெற்றது..
டிஜிட்டல் பொருளாதாரத்தில் அதிகாரம் அளித்தல் எனும் தலைப்பில் நடைபெற்ற இதில் மேலாண்மை துறை சார்ந்த நவீன தொழில் நுட்பங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது..
முன்னதாக இதற்கான துவக்க விழா இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் செயலர் சரஸ்வதி கண்ணையன் தலைமையில் நடைபெற்றது கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்..
இதில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அருண்குமார் பொன்னுசாமி கலந்து கொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்தார் இதில் முன்னனி நிறுவனங்களின் நிர்வாகிகள் ரவீந்திரன்,செல்வகுமார்,மோகன் ராஜன்,ஆகியோர் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளிடே உரையாடினர்..
அப்போது மாறி வரும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் இளம் தொழில் முனைவோர் சந்திக்கும் சவால்கள் குறித்தும் அதனை எதிர் கொள்வது குறித்து பேசினர் குறிப்பாக தற்போது உலக அளவில் டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தில் அனைத்து துறைகளிலும் உள்ள மாற்றங்கள் குறித்து விரிவாக பேசினர்..
நிகழ்ச்சியில் மேலாண்மை துறை தலைவர் சுதாகர் உட்பட மாணவ,மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்…