திட்டச்சேரியில் மகளிர் திட்டம் சார்பில் இயற்கை விற்பனை சந்தை கண்காட்சி நடைப்பெற்றது…

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் வட்டாரத்திற்குட்பட்ட திட்டச்சேரி பேருந்து நிலைய வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர் புற வாழ்வாதார இயக்க மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருட்களின் இயற்கை சந்தை விற்பனை கண்காட்சி நடைப்பெற்றது.

இதில் காய்கறி வகைகள்,கீரை வகைகள்,பழ வகைகள்,பாரம்பரிய அரிசி வகைகள்,சிறுதானிய வகைகள்,மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் இதர வேளாண்மை சார்ந்த பொருட்கள் விற்பனை கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கி சென்றனர்.இந்த விற்பனை கண்காட்சியில் உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட வள பயிற்றுனர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்,மகளிர் சுயஉதவிக்குழுவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Share this to your Friends