செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை
பள்ளி மேலாண்மை குழு இணைந்து திம்மாபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 13 ஆம் ஆண்டு விழா

பள்ளி வளாகத்தில் நடைபெற்றது திம்மாபுரம் அரசினர் உயர்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு 13 ஆண்டுகள் முடிந்த நிலையில் ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர் இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் கெங்காதுரை
தலைமை தாங்கி தொடங்கி வைத்தார் தலைமை ஆசிரியர் ம.வளர்மதி சதாசிவம் விழாவில் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராகசென்னை ஆலந்தூர் நீதிமன்ற எம்.சி சி.சதாசிவம் கலந்து கொண்டார் இதில்பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜி.ஜெயலட்சுமி
பள்ளியின் ஆசிரியர்கள் ச.சித்ராதேவி சு.அன்னசெல்வி கி.பிரபாமாலினி ஏ.விஜயா
சு.பிரேமா உள்ளிட்டோர் விழாவில் சிறப்புரையாற்றினர்,மேலும் பள்ளி விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது

Share this to your Friends