2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டி
ஜெயலலிதா பேரவை சார்பாக திருவிளக்கு பூஜை ,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு சீர்காழி சட்டநாதர் கோவிலில் நடைபெற்றது:-

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா அதிமுக சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோவிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேரவை சார்பாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை வழிபாடு மேற்கொண்டனர். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது

. திருவிளக்கு பூஜையில் மஞ்சள், குங்குமம், மலர்களால் சிறப்பு அர்ச்சனை செய்து ஏராளமான பெண்கள் வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் மார்கோனி இமயவர்மன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.சக்தி ,மகளிரணி பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share this to your Friends