மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்
மயிலாடுதுறையில் தமிழக வெற்றிகழகத்தினர் முதல் போராட்டம். மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும் கள்ளசாராய விற்பனையை தடுக்க வலியுறுத்தியும் 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் கிட்டப்பா அங்காடி முன்பு தமிழக வெற்றி கழகம் சார்பில் மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து முதல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர பொறுப்பாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கோபிநாத் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
மயிலாடுதறையில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் விற்பனையை கண்டித்தும், தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாத்திட வலியுறுத்தியும், மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் மத்திய அரசின் மும்மொழி கொள்கையை கட்டாயமாக திணிப்பதை கண்டித்தும், வக்ஃபு திருத்த மசோதாவை கண்டித்தும், , வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991 அமல்படுத்தி வழிபாட்டுத்தலங்களை காத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.