விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் புதியதாக திறக்க உள்ள முதல்வர் மருந்தக இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கம் மூலம் 24 முதல்வர் மருந்தகங்கள் புதியதாக அமைய உள்ளது.விக்கிரவாண்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட் மூலம் மெயின்ரோட்டில் புதியதாக முதல்வர் மருந்தகம் திறக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் மருந்தகம் திறக்க உள்ள இடத்தை ஆய்வு செய்து ஏற்பாட்டு பணிகள் குறித்தும் , மருந்தகத்தில் எந்ததெந்த மருந்துகள் பொதுமக்களுக்கு கிடைக்க உள்ளது குறித்து கேட்டறிந்து பின்னர் ஆலோசனையை வழங்கினார்.

தாசில்தார் யுவராஜ்,நேர்முக உதவியாளர் லட்சுமிபதி, கூட்டுறவு துணை பதிவாளர் சிவபழனி, சார்பதிவாளர் கனகவள்ளி, செயலாளர் குமார், வருவாய் ஆய்வாளர் தமிழரசன், வி.ஏ.ஓ., ராஜா உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் உடனிருந்தனர் .

Share this to your Friends