கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்9842427520.
பல்லடத்தில் 110 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சாமலாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பல்ல பாளையம் பகுதியிலுள்ள மண்டபத்தில் 110 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பல்லடம் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மகாலட்சுமி சங்கீதா, வரவேற்புரை ஆற்றினார். சாமலாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் விநாயகா பழனிச்சாமி குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகள் வழங்கப்பட்டது. அதேபோல் கர்ப்பிணி பெண்கள் உண்ணும் காய்கறிகள் குறித்து எளிதில் அறிந்து கொள்ள எதுவாக கண்காட்சி படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.