கந்தர்வக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உ. வே. சாமிநாதர் பிறந்த தினம் இலக்கிய மறுமலர்ச்சி தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைத்தையும் வரவேற்றார்.

உ.வே.சா பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பேசும்போது
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்துக்கு அருகில் உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் 19.2.1855-இல் வேங்கடசுப்பையருக்கும் சரசுவதி அம்மையாருக்கும் உ.வே.சா. புதல்வராகப் பிறந்தார்.

பழந்தமிழ் நூல்கள் பலவும் அச்சாகாமல், ஓலைச்சுவடிகளாய், இருக்கும் இடம் தெரியாமல் சிதறி கிடந்த காலத்தில் ஊர் ஊராக, நடையாய் நடந்து திரிந்து, ஓலைச்சுவடிகளை தேடி எடுத்து தமிழாய்ந்த அறிஞர்களுடன் உரையாடியதன் அடிப்படையில் கிடைத்த ஏடுகளை வரிசைப்படுத்தி அச்சில் நூல் வடிவாய் கொண்டு வந்தவர் தமிழ் தாத்தா என்றும் ,உவேசா என்றும் அழைக்கப்படும் உத்தமதானபுரம் வே. சாமிநாதர் சங்க காலம் தொடங்கி தமிழ் இலக்கியங்கள் பலவும் நூல் வடிவில் இன்று நமக்கு கிடைக்கிறது

என்றால் அதற்கு முக்கிய காரணம் உ வே சா.1880 பிப்ரவரி 16-ல் கல்லூரித் தமிழாசிரியர் பணியை ஏற்ற உ.வே.சா., தொடர்ந்து 23 ஆண்டுகள் தனது பணியைத் திறம்படச் செய்து, மாணவர்களுக்குச் செறிவான தமிழறிவை ஊட்டியவர் என்பதை அவரது வரலாறு வெளிப்படுத்துகிறது. பொதுவாக அவரது ஆசிரியப் பணிக்கால அனுபவத்தை மூன்று நிலைகளாகப் பகுத்துக்கொள்ள முடியும்.

என் சரித்திரம் என்ற நூலை தமிழ் அறிஞர் உ. வே. சாமிநாதர் எழுதியுள்ளார். அவருடைய பிறந்த நாளில் நாம் தொடர்ந்து வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ன உறுதி எடுத்துக் கொள்வோம்என்று பேசினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Share this to your Friends