திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்திய கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப்போட்டி திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்திருநெல்வேலி மாவட்ட சிறுபான்மையர் ஆணைய அலுவலர்
ஜெ.ராஜசெல்வி அனைவரையும் வரவேற்று பேசினார்.
டிடிஎன் கல்விக் குழுமம் தலைவர் டி.டி.என்.லாரன்ஸ் முன்னிலை உரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் திருநெல்வேலி மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்து, வாழ்த்துரை வழங்கினர்.

திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தலைமை உரை ஆற்றினார்.தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் சபாநாயகர் மு.அப்பாவு குத்துவிளக்கு ஏற்றி பேச்சுப் போட்டியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியின் நிறைவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்அலெக்ஸ் அப்பாவு அனைவருக்கும் நன்றி கூறினார்.

ஒன்றே குலம்! ஒருவனே தேவன் மனித நேயம் ஓங்கட்டும் மதவெறி நீக்கப்படும் மக்களாட்சியின் மாண்பும் மதச்சார்பற்ற அரசும் ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு இந்திய சமூகநீதி வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்கு சதிக்கு கால் முளைத்து சாதியானது உள்ளிட்ட பல்வேறு நல்ல தலைப்புகளில் நடைபெற்ற
இந்த பேச்சப்போட்டியில் மாவட்டம் முழுவதிலுமிருந்து கல்லூரி மாணவ மாணவிகள் திரளானோர் மிகுந்த ஆர்வத்துடன், கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி இறுதியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் பாராட்டு பத்திரங்களும் வழங்கப்பட்டன நிகழ்ச்சி கலந்து கொண்ட மாண மாணவிகள் இதுபோல நிகழ்வுகள் எங்களுடைய திறமைகளை வளர்ப்பதற்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்வதாகவும் மாணவ மாணவிகளிடையே இதுபோல நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தும் எனவும் கூறினர்.

Share this to your Friends