முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதி களில் ஒன்றான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி எதிர்வரும் 25 ம் தேதி காலை மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்ட், கட்டபொம்மன் சிலை அருகில் ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெற உள்ளது.
மாவட்ட அளவிலான மறியலுக்கு மதுரை மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களை சந்திப்பு இயக்கங் களை நடத்தி 5,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை மறியலில் ஈடுபடுத்துவதற்காக மதுரை மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பாண்டி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சங்கத்தின் நிர்வாகி மனோகரன் ஆகியோர் தலைமையில் சேடப்பட்டி, சின்ன கட்டளை, ஏழுமலை, டி.இராமநாதபுரம், எம்.கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் களிடம் மறியலுக் கான துண்டு பிரசுரம் வழங்கும் பிரச்சாரம் மற்றும் சுவரொட்டி இயக்க பிரச்சாரம் நடைபெற்றது.