தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் போக்குவரத்து கழங்களை பாதுகாக்க நிதி ஒதுக்க வேண்டும், தொழிலாளர்களின் பேச்சுவார்த்தையை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போக்குவரத்து பணிமனைகளில் தொழிலாளர் சந்திப்பு இயக்கம் தஞ்சாவூர் நகர் கிளையில் நடைபெற்றது.
இந்த இயக்கத்திற்கு ஏஐடியுசி பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன், சி ஐ டி யு பொருளாளர் எஸ்.ராமசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 17000 பேருந்துகள் மாநில முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இயக்கப்படுகிறது.
பள்ளி மாணவ மாணவியர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் முழு இலவச பயணச் சேவை அளிக்கப்படுகிறது.
இரவு பகல் முழுவதும் இயக்கப்படுகிறது. நாள்தோறும் சுமார் ஒரு கோடி பேர் பயணம் செய்யும் நிலையில் போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. மக்கள் பயணச் சேவையை உறுதி செய்யவும், போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்கவும் தமிழ்நாடு அரச நிதி ஒதுக்க வேண்டும், வரவுக்கு செலவுக்குமான இடைவெளியை நிரப்பிட வேண்டும்,
தொழிலாளர்களின் 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இனியும் தாமதப்படுத்தாது உடனடியாக பேசி முடிக்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வை நீதிமன்ற தீர்ப்பின்படி முழுமையாக வழங்க வேண்டும், 01.06.23 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு காலபணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், அவரவர் கல்வி தகுதிக்கேற்ப வாரிசு பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மாநிலம் தழுவிய தொழிலாளர் சந்திப்பு இயக்கத்தில் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்வில் போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், ஏஐடியுசி நிர்வாகிகள் சி.ராஜமன்னன், டி.செந்தில்குமார், பி.முருகவேல், சிஐடியு நிர்வாகிகள் கே.பிரபாகர், ஏ.சதீஷ் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல் கரந்தை புறநகர் பணிமனையில் நடைபெற்ற தொழிலாளர் சந்திப்பு இயக்கத்தில் சிஐடியு தலைவர் டி.காரல்மார்க்ஸ் தலைமையில் நிர்வாகிகள் ராஜசேகர், முருகானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.