கடத்தூர் அருகே கேத்து ரெட்டிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி யில் ஆண்டு விழா கொண் டாடப்பட்டது.

இதையொட்டி பள்ளியில் விளை யாட்டு போட்டிகள், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கலை, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு நடந்தது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவிற்கு தலைமையாசிரியர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார்.

பட்டதாரிஆசிரியர் நடராஜன் வரவேற்றார், இவ்விழாவில், பள்ளி அளவில் சிறப்பிடம் மற்றும் மாவட்ட அள விலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டி பரிசுகள் வழங் கப்பட்டது.

நிகழ்ச்சியில் பெற் றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சபரி ,பள்ளி மேலாண்மை குழு தலைவி ரோஜா , முன்னிலை வகித்தனர் ,சிறப்பு அழைப்பாளராக ஊர் தலைவர் நாராயணசாமி. விஸ்வநாதன் , புற்றுநோய் சிறப்பு மருத்துவர் தினேஷ் சௌந்தர்ராஜன், தலைமை ஆசிரியர் அறிவழகன் ஆகியோர் பங்கேற்று பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள் ,

இதில் வனக்குழு தலைவர் தர்மன் (எ) பிரபு . மயில் முருகன் , தலைமை ஆசிரியர் அங்கப்பன் கால்நடை மருத்துவர் சக்திவேல் முருகேசன் முன்னாள் சுகாதாரத்துறை சிவப்பிரகாசம் அஞ்சல் முருகன்மாவட்ட LPF பொருளாளர் ஆளப்பன் உள்ளிட்ட

பள்ளி இருபால் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற் றோர்கள் கலந்து கொண் டனர். பின்னர் பள்ளியில் மாணவ மாணவியன் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது ,

Share this to your Friends