புழல் சூரப்பட்டு பிரதான சாலை திருமால் நகரில் உள்ள காட்சன் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் 16 வது ஆண்டு விழா பள்ளியின் தாளாளர் பால்ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளியின் முதல்வர் மேக்லிகெலன் பள்ளியின் சிறப்பம்சங்கள்,வளர்ச்சி பணிகள் பற்றியும் விளக்க உரையாற்றினார்.

இதில் சிறப்பு விருந்தினராக ஏ .டபிள்யூ .இ . மினிஸ்ட்ரிஸ் தலைவர், அனில் குமார்காரு கலந்து கொண்டு பள்ளியில் படிப்பு,விளையாட்டு, மற்றும் பல துறைகளில் முன்னேற்றம் அடைந்த மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகளும் கேடயமும் வழங்கி மாணவ மாணவிகளை படிப்பில் சிறந்த விளங்க வேண்டும் எனவும் பெற்றோர்களின் சொல்படி கேட்டு அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் எனவும் பள்ளியில் பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்களை மதித்து பாடங்களின் மேல் கவனம் செலுத்தவும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும் மாணவர்களை ஊக்கப்படுத்தி உரையாற்றினார்.

பின்னர் மாணவ , மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .
குறிப்பாக குறிஞ்சி, முல்லை ,மருதம் நெய்தல் ,பாலை ஆகியவற்றை குறிக்கும் நிலங்களின் வாழும் மக்களின் இயல்பு நிலை குறித்த நடனம் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இதில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Share this to your Friends