பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் 1997 -ஆண்டு, சுமார் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு அப்போது பெரம்பலூர் பேரூராட்சியாக இருந்த போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு
2000 -ஆம் ஆண்டில் கட்டி நிறைவு செய்யப்பட்டது.சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டிலிருந்த மேல்நிலைப்பள்ளி நீர்தேக்க தொட்டி கடந்த சில வருடங்களாக பயன்பாட்டியில்லாமல் சேதமடைந்து காணப்பட்டது.
இந்நிலையில் இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க பெரம்பலூர் நகராட்சி சார்பில் மேல்நிலைநீர்தேக்க தொட்டி இடித்து தரைமட்டமாக்க முடிவு செய்யப்பட்டு
அதற்காக நேற்று(பிப்-14) காலை 11 மணி முதல் பெரம்பலூர் நகராட்சி மூலம் தொட்டியை இடிக்கும் பணி தொடங்கிய நிலையில் சுமார் 10 மணி நேர பணிக்கு பிறகு இரவு 9:30 மணியளவில் நீர்தேக்க தொட்டி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது
மின்சாரத்துறையினர் முன்னெச்சரிக்கையாக மின்சாரத்தை துண்டிருத்த நிலையிலும் காவல்துறையினர் பொதுமக்களை 100 மீட்டருக்கு அப்பால் பொதுமக்களை கட்டுப்பாட்டுடன் வைத்தநிலையில் எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பு டன் நீர்தேக்க தொட்டி இடித்து தரைமாக்கப்பட்டது
முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு மீட்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.