திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் தவசிமடையில் பகுதியில் உள்ள புனித அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு வருடம் வருடம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
இவ்வாண்டு நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து பல்வேறு இடங்களான தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இருந்து காளைகள், மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்வார்கள்.பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்களும் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசிப்பார்கள்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடக்க இருக்கும் இடத்தில் வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரம் நடை பெற்று வருகிறது.
இந்தப் பணியை கோட்டாட்சியர் சக்திவேல், கிழக்கு தாசில்தார் மீனாதேவி, மண்டல துணை தாசில்தார் பிரேம், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், வி.ஏ.ஓ. சுல்தான் பேகம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.