விழாவின் முக்கியநிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜ யம் நடைபெற்றது. விழாவின் முத்தாய்ப்பாக காலை திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கி யது.திருத்தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையில் கீழமாசி வீதியில் உள்ள தேரடி பகுதிக்கு மீனாட்சிஅம்மனும், சுந்தரே சுவரர் பிரியாவிடை சமேதராக கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டு அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்புஅபிஷேக ஆராதனை கள் நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பெரிய தேரில் சுந்தரேஸ்வர் பிரியாவிடை சமேதராகவும், சிறப்பு அலங்காரத்திலும், மீனாட்சி யம்மன் சிறிய தேரிலும் சிறப்பு அலங்காரத்திலும் எழுத்தருளினர்.

தேரோட்டம் தொடங்கும் முன் அங்குள்ள கருப்பண சுவாமிகோவிலில்சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அதனை தொடர்ந்து பெரிய தேர் புறப்பாடாகி அதை தொடர்ந்து சிறிய தேரும் புறப்பாடானது.

சுவாமி அம்மன் திருத்தே ருக்கு முன்பாக அலங்கரிக் கப்பட்ட யானை முன்னே செல்லும்போது அவற்றை தொடர்ந்து முதலில் விதாய கரும் இரண்டாவதாக முருகப்பெருமானும், தொடர்ந்து நாயன்மார்களும் அமர்ந்தி ருந்த சப்பரங்கள்சென்றது. சுவாமி, அம்மனின் திருத்தேரானது மதுரைநகர வீதிக னான கீழமாசி வீதி, தெற்கு மாசி வீதி. மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிகளில் வலம் வந்து பின்னர் மதியம் கீழமாசி வீதியில் உள்ள தேரடியை வந்தடைந்தது.

மாசி வீதிகளின் ஆடி அசைந்து வந்த மீனாட்சி சுந் தரேஸ்வரர் திருத்தேரின் முன்பாக ஏராளமான சிவ பக்தர்கள் கைலாய வாத்தி யங்களைமுழங்கியயடியும். பல்வேறு இசைகளை இசைத்தபடியும் மீனாட்டு சுந்தரேஸ்வரர்பதிகம் பாடிய படியும், ஹர ஹர சிவா என பக்தி முழக்கம் விண்ணைப் பிளக்க பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் தேரைவடம் பிடித்து இழுத்துசென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை திருவிழாவை மதுரைமற்றும்சுற்றுவட்டா ரங்களில் இருந்தும்அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக் தர்கள் வருகை தருவார்கள் என்பதால் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *