திருவொற்றியூர்

மணலி மண்டலத்தில், 32 வது சாதாரண குழு கூட்டம், நேற்று காலை, மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலை மையில் நடந்தது. இதில், செயற்பொறியாளர் தேவேந்திரன், மண்டல நல அலுவலர் தேவிகலா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், 110 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பங்கேற்ற, தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., கவுன்சிலர்கள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் வார் டின் அடிப்படை தேவைகள் குறித்து பேசினர்.

பதிலளித்து பேசிய மணலி மண்டல செயற்பொறியாளர் தேவேந்திரன் :
ரெடிமிக்ஸ் கலவை நிறுவனத்தால், மாசு அதிகரித்திருப்பதாக கவுன்சிலர் குற்றசாட்டு தெரிவித்துள்ள நிலையில், உ டனடி ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். புதிய கட்டங்களுக்கு, கல்வெட்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மண்டலம் முழுவதும், சேதமான கழிப்பறைகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் கணக்கெடுத்து, இடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சி.பி.சி.எல்., நிறுவனத்திடம், 200 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக் கான, திட்டவரைவு சமர்பிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

கூட்டத்தில் பங்கேற்க வந்த, 21 வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ராஜேஷ்சேகர், கருப்பு சட்டை அணிந்து வந்ததா ல், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து, அவரிடம் கேட்ட போது, புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கருப்பு சட்டை அணிந்ததாக, அவர் விளக்கமளித்தார்.

Share this to your Friends