மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சிறப்பாக செயல்பட்டு வரும் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியின் 100 வது ஆண்டு விளையாட்டுப் போட்டி விழா நடைபெற்றது. முன்னதாக சீர்காழி காவல் நிலைய முகப்பு பகுதியில் இருந்து ஒலிம்பிக் ஜோதியினை பள்ளியில் முன்னாள் மாணவரும், தமிழ் சங்க தலைவருமான பொறியாளர் இ. மார்க்கோனி அவர்கள் துவங்கி வைத்த ஒலிம்பிக்ஜோதியை மாணவர்கள் கையில் ஏந்தி கொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளி விளையாட்டு மைதானத்தை அடைந்தனர்.

பின்பு விளையாட்டு விழாவுக்கான துவக்க விழா நடைபெற்றது. விழாவில் பள்ளியின் செயலர் வி. சொக்கலிங்கம் அவர்கள் தலைமை தாங்க, பள்ளியின் தலைமை ஆசிரியர் நல்ல ஆசிரியர், அறிவுடை நம்பி முன்னிலை வகித்தார்.

இவ் விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவரும், சமூக சேவகருமான, பொறியாளர் இ.
மார்கோனி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்து சிறப்புரையாற்றினார்.

பின்பு அப்பள்ளியின் முன்னாள் மாணவர் பொறியாளர் எஸ். திருநாவுக்கரசு ஒலிம்பிக் கொடியினையும், ஒலிம்பிக் தீபத்தை விளையாட்டு மைதானத்தில் ஏற்றி வைத்து சிறப்பு செய்தார். பின்பு பள்ளியின் முன்னாள் மாணவர் பொறியாளர், பி. கார்த்திகேயன்,பள்ளி கொடியினை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அனைத்துவிளையாட்டு விழாவினை பள்ளியின் உடற்கல்வி இயக்குனரும், உதவி தலைமை ஆசிரியருமான, நல்லாசிரியர் எஸ்.முரளிதரன் ஒருங்கிணைக்க, உடற்கல்வி ஆசிரியர்கள், முரளி, மார்க்கண்டன், சக்திவேல், ராகேஷ், கபிலன், ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்தனர். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் என்.துளசி ரங்கன், டி.சீனிவாசன், மற்றும் ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் பி. புலவேந்திரன், வி.முருக பாண்டியன்,மற்றும் ஆசிரியர்கள், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் விளையாட்டு உறுதிமொழி ஏற்று விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

Share this to your Friends