தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகத்தை கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி நெசவாலையில் பணிபுரிந்த போது அங்கு வந்த காவல்துறையினர் அத்து மீதி எந்தவித காரணமும் இன்றி கைது செய்ததாக கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் நேற்று மாலை இந்து முன்னணியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி. பி ஜெயக்குமார், மாநிலச் செயலாளர் குற்றாலநாதன், நெல்லை கோட்டச் செயலாளர் ஆறுமுகச்சாமி தென்காசி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், பொதுச் செயலாளர் மணிகண்டன், நகரத் தலைவர், பாடாலிங்கம், செயலாளர்கள் திருமலை குமார், மாரிமுத்து, பொதுச் செயலாளர் விஜய் பாலாஜி, நகரப் பொருளாளர் குரு சந்திரன், துணைத் தலைவர் பாஸ்கரன், தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க மாநிலத் துணைத் தலைவர் மாரிமுத்து, ஐயப்பா சேவா சங்க தலைவர் சுப்பிரமணியன், பாஜக நகர இளைஞரணி தலைவர் விக்னேஷ் மற்றும் நான்கு பெண்கள் உள்ளிட்ட 91 பேரை சங்கரன்கோவில் சரக காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையில் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். தடையை மீறி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Share this to your Friends