மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்காமல் அநீதி இழைத்தபோதும் , தமிழக முதலமைச்சர் மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்; பாஜகவே தமிழகத்தின் திமுக தேர்தல் அறிக்கையை பின்பற்றுகிறது:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சந்திரபாடி மீனவ கிராமத்தில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் அமைக அடிக்கல் நாட்டி அமைச்சர் மெய்யநாதன் பேச்சு:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் நண்டலாற்றின் இருபுறமும் நேர்கல் சுவர் அமைத்தல் மற்றும் மீன் இறங்குதளம் மேம்படுத்தும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கி வைத்தார். தொடர்ந்து பிரதான் மந்திரி மஸ்த்திய சம்பதா யோஜனா திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் 9 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்புடைய குளிர்பதனப் பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனம் 40 சதவீத மானியத்தில் வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசாங்கம் தமிழகத்திற்கு நிதி வழங்காமல் அநீதி இழைத்தபோதும் , தமிழக முதலமைச்சர் மக்களுக்கு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. பாஜகவே தமிழகத்தின் திமுக தேர்தல் அறிக்கையை பின்பற்றுகிறது என்றார்.

இதில் எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share this to your Friends