அறிஞர் அண்ணா கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் ஜிஞ்சுபள்ளியில் இலவச மருத்துவ முகாம் .

சேலம் பெரியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து நடத்தும் 7 நாட்கள் சிறப்பு முகாமில் நாட்டு நலப்பணித் திட்டதின் சார்பில் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஓசூர் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் சு.தனபால் அவர்கள் தலைமை தாங்கினார்.

தன்னுடைய தலைமை உரையில் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இலவச மருத்துவ முகாம் ஒவ்வொரு ஆண்டுதோறும் நாட்டு நல பணி திட்டத்தின் சார்பில் இலவசமாக கிராமப்புற மக்களுக்கு சேவை செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதன் மூலம் நோய்கள் கண்டறியப்பட்டு பாதி கட்டணத்தில் மருத்துவ சேவையை வழங்கி வருகின்றன

இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு இப்பகுதி மக்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசினார். மேலும் இம்முகாமில் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்வேறு வகையான கண், காது, மூக்கு, தொண்டை, வயிற்று கோளாறு, இதயம் மற்றும் சிறுநீரகம் போன்ற அனைத்து வகையான நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. இதில் மேல் சிகிச்சை தேவைபடுவோற்க்கு அனைத்து ஏற்பாடுகளையும் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ் அவர்கள் வாகன வசதி மற்றும் கட்டண குறைப்பு போன்ற ஏற்பாடுகளை செய்து கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்களான முனைவர் மா. ஜெகன் இரா. ராமமூர்த்தி,இரா. சரவணகுமார் மற்றும் கே .ராமமூர்த்தி ஆகியோர் இந்த சிறப்பு முகாமிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.

Share this to your Friends