காங்கயத்தில் பிஜேபி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
டெல்லியில் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இந்திய முழுவதும் பிஜேபி கட்சியினர் வெடிகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகரத்திலும் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் எஸ். மோகனபிரியா சரவணன் தலைமையில் பிஜேபி கட்சியினர் காங்கயம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டாவின் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வெற்றியையும், மகழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முனைவர் மோகனப்பிரியா சரவணன்,
மாவட்டதுணை தலைவர் கோபாலகிருஷ்ணன், கலா, சித்ராதேவி, நகர பொதுச் செயலாளர்கள் பிரவீன், மணிகண்டன் கலந்து கொண்டனர்.