அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக தருமபுரி மாவட்டத்திலேயே முதன் முறையாக ஜனவரி 26ம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற தேசிய குடியரசு தின விழா முகாமில் பங்கேற்று திரும்பிய தமிழ்த்துறை மாணவன் தினகரன் அவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் மங்கையர்க்கரசி அவர்கள் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இம் முகாமில் பங்குபெற கடந்த ஒரு வருடமாக கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டது. இம் முகாமில் பங்குபெற முதலில் பெரியார் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற தேர்வில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தென்மண்டல அளவில் நடைபெற்ற முகாமிலும் தமிழ்நாட்டின் சார்பாக முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றதும் சிறப்பிற்குறியது. அதன்பின்னர் புதுதில்லியில் ஜனவரி 1 முதல் 31 வரை நடைபெற்ற முகாமில் பங்குபெற்று வீறுநடைப்போட்டது பெருமைக்குரியது.

கடந்த இரண்டு வருடங்களாக இக் கல்லூரியிலிருந்து மாநில அளவிலான குடியரசு தின விழாவில் பங்கு பெற்றதும் தினகரன் ஊக்கமடைய காரணியாக விளங்கியது என்று முதல்வர் அவர்கள் புகழாரம் சூட்டினார்.

இப் பாராட்டு விழாவை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் கோபிநாத் ஏற்பாடுகளை செய்தார்.

Share this to your Friends