கடலூரில் போக்குவரத்து காவலர்களின் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி..

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் உத்தரவுபடி துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன்குமார் அறிவுறுத்தலின்படியும் போக்குவரத்து காவல்துறை பொதுமக்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டும் பொழுது ஹெல்மெட் அணிய வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன் குமார் முன்னிலையில்
எம் எல் ஏ மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தனர்.

பேரணி காவல் ஆய்வாளர் அமர்நாத்,காவல் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் மகாலிங்கம் ராமச்சந்திரன் குழு தலைமையில் போக்குவரத்து காவலர்கள் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டும்போது ஹெல்மெட் அவசியம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு பேரணியை டவுன்ஹாலில் இருந்து புறப்பட்டு திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டை வழியாக பேரணியாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது பொது மக்களை முற்றிலும் ஈர்த்தது.

Share this to your Friends