தஞ்சாவூர் ஒன்றிய அரசின் ஜல் சக்தி நிலத்தடி நீர் வாரியம் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் புவி அறிவியல் துறை சார்பில் நிலத்தடி நீர் தொடர்பான கருத்தரங்கம் துணைவேந்தர் சங்கர் தலைமையில் நடைபெற்றது.
கருத்தரங்கில் ஒன்றிய அரசின் நீர் வாரியத்தின் மண்டல இயக்குநர் சிவகுமார் கூறுகையில் நிலத்தடி நீரை தொடர்ச்சியாக எடுத்து வந்தால் காவிரி டெல்டாவில் கடல் நீர் உட்புகும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கூறுகையில் தமிழகத்தில் 30 சதவீதம் நிலத்தடி நீர் பாதுகாப்பாக உள்ளதாகவும் 70 சதவீதம் செமி கிரிட்டிக்கல் நிலையில் உள்ளதாகவும் நிலத்தடி நீர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாகவும் நீர் மட்டம் குறைவதை தடுக்க ஒன்றிய அரசு ரூ. 3500 கோடிமதிப்பீட்டல் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
நிலத்தடி நீரில் கடல்நீர் உட்புகுவதை கண்டறிய 60 இடங்களில் தானியங்கி டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். புவி அறிவியல் துறை தலைவர் நீலகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.