தென்காசி மாவட்டம், கடையம் வட்டாரம் கோவிந்தப்பேரி கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் ஊராட்சி மன்றதலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தப்பேரி ஊராட்சியில் நடைபெற்ற வருமுன் காப்போம் மருத்துவ முகாமிற்கு கோவிந்தப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கினார்.
தென்காசி வட்டாரம் கடையம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் எஸ். பழனிக்குமார் முன்னிலை வகித்தார். ஸோஹோ நிறுவனத்தின் சித்தார்த் பண்ணை மற்றும் கலைவாணி கல்வி மையம்இயக்குநர் அக்ஷ்யா குத்து விளக்கு ஏற்றி மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார் அவர்களுடன் ஸ்ரீதர் வேம்பு அவர்களின் நேர்முக உதவியாளர் கார்த்திக் கலந்து கொண்டார்.
இந்த மருத்துவ முகாமில் கடையம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் எஸ்.பழனிக்குமார் தலைமையில் மருத்துவர்கள் சங்கரி , தேவி கற்பூர நாயகிஅஜ்மல், ரத்தான தேவி, ஆஷாபர்வின் மற்றும் மருத்துவமனை மேற்பார்வை யாளர் என்.ஹரிசங்கர் மற்றும் சுகாதார செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்த முகாமில் பொதுமருத்துவம் மகப்பேறு மருத்துவம் ஸ்கேன் இ.சி.ஜி கண் மருத்துவம் தொழுநோய் சிகிச்சை பல் மருத்துவம் சித்த மருத்துவம் ஆய்வக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை கடையம் வட்டார சுகாதார மேற்பார்வையாளார் எஸ்.ஆனந்தன் சுகாதார ஆய்வாளர் எஸ்.தர்மர் செய்து இருந்தனர் மேலும் முகாமில் சிங்ககுட்டி, கருப்பசாமி, இளங்கோ, சிவா,மாரிதுரை கிருஷ்ணன், அன்னம் கோமு, சண்முகதாய் நாச்சியார் சுப்பையா பாண்டியன், செந்தில்குமார் முகாமில் கலந்து கொண்டார்கள். முடிவில் கோவிந்தப்பேரி ஊராட்சி மன்றத் தலைவர் டி.கே.பாண்டியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.