மயிலாடுதுறை மூன்றாவது புத்தகத் திருவிழாவில் ரோட்டரி சங்கம் சார்பில் 800. புத்தகங்களும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 200 புத்தகங்களும் என 1000 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறையில் மூன்றாவது புத்தகத் திருவிழா இன்று 9 வது நாளாக நடைபெற்று வருகிறது. தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் நடைபெற்று வரும் இப்புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று புத்தக திருவிழாவில் மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளி திருவாவடுதுறை, அரசு மேல்நிலைப்பள்ளி கீழப்பெரும்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி சங்கரன்பந்தல்,அரசு மேல்நிலைப்பள்ளி புதுப்பட்டினம்,அரசு மேல்நிலைப்பள்ளி கொற்கை,மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி, சீர்காழி நகராட்சி மேல்நிலைப்பள்ளி, மேலநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வில்லியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி, காவேரிபூம்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 800 மாணவ,மாணவிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 200 மாணவ, மாணவிகளுக்கும் ஆக மொத்தம் 1000 மாணவ, மாணவிகளுக்கும் ரூ.1 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி மகாபாரதி வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.உமாமகேஸ்வரி, மயிலாடுதுறை ரோட்டரி சங்க சாசன தலைவர் திரு.ராமன், மயிலாடுதுறை ரோட்டரி சங்க தலைவர் திரு.இளங்கோவன், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி,விஷ்ணுபிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.அர்ச்சனா, செயலாளர் திரு.பொகுட்டுலினி, மயிலாடுதுறை வர்த்தக சங்க தலைவர் திரு.மதியழகன், முன்னாள் தலைவர்கள் திரு.துரை,திரு.மணிகண்டன்,திரு.முத்துசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.