நெல்லை மாவட்ட திமுக அலுவலகத்தில், திருநெல்வேலி மத்திய மாவட்ட தி.மு.கழகம் சார்பில் 335 அங்கன்வாடிகளில் பணிபுரியும் சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள் 600க்கும் மேற்பட்ட நபர்களுக்குபெட்ஷீட், சேலை மற்றும் எடை மெஷின் இல்லாத 35 அங்கன்வாடிகளுக்கு எடை மெஷின் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, 600க்கும் மேற்பட்டவர்களுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, நெல்லை மாநகரச் செயலாளர் சு.சுப்பிரமணியன், திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு, திமுக மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் சத்யா பழனிகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.