திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கொட்டாப்புள்ளி பாளையம் பகுதியில் 189. வீட்டு மனைகள்-189 என்ற மூலம் ஸ்கீம் மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. செயல்படுத்தப்பட்டு அதில் 71 குறைந்த வருவாய் வீடுகள் கட்டப்பட்டு பொதுமக்களின் உபயோகத்திற்காக விற்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் ஆறுச்சாமி என்பவர் அரசு நிலத்தில் அத்துமீறி நுழைந்து அரசு வசம் இருந்த வீடை உடைத்து அதில் குடியேறியதுஉடன் நிலத்தில் முல்வேலியிட்டு அதிகாரிகளுக்கு இடையூறு செய்து வந்தார்.
அப்போது ஆறுச்சாமி வீட்டு வசதி வாரியம் ஆர்ஜிதம் செய்த நிலம் தனக்கு சொந்தமானது என முதல்-அமைச்சரின் தனிப் பிரிவுக்கு மனு அனுப்பி இருந்தார். இந்நிலையில் ஈரோடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் சுமதி,உதவி செயற்பொறியாளர் கவிதாவாணி உதவி பொறியாளர்கள் சரவணன்ராஜா மற்றும் தினேஷ் மற்றும் தாசில்தார் திரவியம் வருவாய் ஆய்வாளர். அசோக் கிராம நிர்வாக அலுவலர் பத்மநாபன். போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயசாரதி,வீட்டு வசதி வாரிய புதிய குடியிருப்புகள் கட்டிய பகுதிக்கு ஆய்வு பணிக்காக வந்தார்.
அப்போது அங்கு வந்த ஆறுச்சாமி அதிகாரிகளை பணி செய்யவிடாமல்
கையில் கற்களை எடுத்துக்கொண்டு அடிக்க துரத்தினார் மேலும் தகாத வார்த்தைகளில் அதிகாரிகளை பேசினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்.
இதுகுறித்து தாராபுரம் போலீசில் செயற்பொறியாளர் சுமதி புகார் அளித்தார். அந்தபுகாரின் பேரில் போலீசார் ஆறுச்சாமியை கைது செய்தனர். அப்போது அவருக்கு திடீரென மயக்க நிலை ஏற்பட்டது. அப்பொழுது அவரை போலீசார் 108- ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர் ஆனால் அரை மயக்கத்தில் இருந்த அவர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற மறுத்து தரையில் படுத்து கொண்டும் ரகலையில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் பல கட்ட போராட்டத்திற்குப் பிறகு அவரை 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கும் அவர் மருத்துவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன் பலத்த சத்தமிட்டு அனைவரையும் மிரட்டி வந்தார்.அதன் பிறகு மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றார் அவரை போலீசார் வீடு தேடி சென்று கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.அதன் பிறகு அரசுத் துறை அதிகாரிகள் விவசாய ஆறுச்சாமி
ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் கம்பி வேலிகள் மற்றும் மாட்டு தீவன பொருட்கள் ஆகியவற்றை போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து அகற்றினார்.
இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.