ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட கமுதி பழைய தாலுகா ஆபிஸ் சாலை பிரிவில் மறவர்சங்கம் சுந்தரம் செட்டியார்தெரு அண்ணாமலை செட்டியார் தெருவுக்கு செல்லும் சாலை நடுவே கழிவுநீர் கால்வாயில் மேல் போடப்பட்டுள்ள பாலம் நடுவே கான்கீரட் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது இந்த பள்ளத்தில் யாரும் விழுந்திராத வகையில் பொதுமக்கள் கழிவுநீர் சாக்கடையில் கம்புகளை ஊண்டி வைத்து பள்ளம் இருப்பதை நினைவுபடுத்தி வருகின்றனர் மேலும் பஸ் நிலையத்திலிருந்து வரும் பள்ளி மாணவ மாணவிகள் இருசக்கர வாகனங்கள் இந்த இடத்தில் பார்த்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் மேலும் இந்தக் கழிவு நீர் கால்வாய் பள்ளம் மூன்று மாதந்திற்கும் மேலாக இருந்து வருகிறது.
இந்த இடத்திற்கு அருகில் தான் பேரூராட்சிஅலுவலகம் இருக்கிறது ஆனால் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் தினந்தோறும் பார்த்து விட்டு செல்கின்றனர் ஆகையால் பொதுமக்கள் நலன்கருதி உடனடியாக இதனை சரிசெய்ய வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.