தாராபுரத்தில் பனிப்பொழிவு – சாலையை மறைக்கின்ற அளவு பனிப்பொழிவு காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் சிரமத்துக்குள் ஆகினர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சூரியநல்லூர் குண்டடம் நால் ரோடு, வரபளையம், வேங்கிபாளையம், இடையன்கிணறு, சாலக்கடை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது.குறிப்பாக ஒட்டன்சத்திரம்-திருப்பூர் நெடுஞ்சாலையில் கடும் பனி பொழிவு இருப்பதால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு , ஆளாகியுள்ளனர்.
மேலும் அதிக அளவில் பனிப்பொழிவின் காரணமாக
முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்கள் செல்கின்றன. வழக்கத்துக்கு மாறான பனிபோலிவால் நடைப்பயிற்சி செல்பவர்கள் சிரமத்துக்குள் ஆகினர்.