தேனி அல்லிநகரம் நகராட்சி காமராஜர் பேருந்து நிலைய வணிக நிறுவன கடைகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா ஆய்வு தேனி அல்லிநகரம் நகராட்சி பேருந்து நிலையத்தில் வணிக நிறுவன கடைகள் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அதிகாரிகள் வணிக நிறுவன கடைகளில் உணவு பொருட்களில் காலாவதியான பொருட்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப்பைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்
இந்த ஆய்வில் பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு உடனடி அபராதம் விதிக்கப்பட்டது மேலும் 10 கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள் சுமார் 20195 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூபாய் 15,000 உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாக வசூலிக்கப்பட்டது
ஒருமுறை பயன்படுத்தக் கூடிய 11200 கிலோ அளவிலான நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்பட்டது இந்த ஆய்வின் போது தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் நகராட்சி நகர் நல அலுவலர் மரு. கவிப் பிரியா சுகாதார அலுவலர் ஜெயராமன் சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜன் உட்பட நகராட்சி பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர் இந்த ஆய்விற்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்