தென்காசி மாவட்டம், நயினாகரத்தை சேர்ந்த பாலி டெக்னிக் கல்லூரி யில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவர் ஒருவர் உடல் நிலை குறைவு காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மேற்படி நபர் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்

மேற்படி நபர் ஆசாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொண்டதாகவும், அப்போது தனது நண்பர்களுடன் மது அருந்தியதாகவும், இதனால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மூளைச்சாவடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதே போல் அவரது நண்பர்கள் ஏழு நபர்கள் மது அருந்தி இதே போல் பாதிக்கப்பட்டு ஏதோ ஒரு மருத்துவ மனையில் யில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கள்ளச்சாராயம் அருந்தி இருக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல் பரவி வருகிறது.

இது குறித்த விசாரணையில் மேற்படி நபர் மது எதுவும் அருந்தவில்லை எனவும் அவர் நோய் தொற்று காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் மேற்படி பொய்யான செய்தியை பரப்பி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயற்சிக்கும் நபர்கள் மீது காவல் துறையினரால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்காசி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Share this to your Friends