தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் இரண்டு நாள் கருத்தரங்காக தமிழ்நாட்டில் உயர் கல்வியில் நான் முதல்வன் திறன் மேம்பாட்டு படிப்புகளின் வேலைவாய்ப்பு தாக்கம் கருப்பொருளின் “விஷன் விக்சித் பாரத்” 2047 என்ற தலைப்பில் ICSSR- SRC Hyderabad. நிதியுதவியூடன் நடைபெறுகின்றது.
இக்கருத்தரங்கத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 500 க்கு மேற்பட்ட மாணவர்களும், 50 க்கு மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனார்.
கருத்தரங்கில் 50 ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டது. இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சாவூர் பரிசுத்தம் பொறியியல் கல்லூரி தாளாளர் எஸ்.பி.அந்தோணிசாமி கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். முனைவர் சு.தங்க பிரசாத் சிறப்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் எம்.சுமதி விழாவிற்கு தலைமை தாங்கினார்.
கருத்தரங்க கருப்பொருள் மற்றும் நான் முதல்வன் திட்டம் பற்றி கருத்தரங்க இயக்குனர் மற்றும்பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஆ.அருள்ராஜ் விரிவான விளக்க உரையாற்றினார் விழாவில் முன்னதாக ஒருங்கினைப்பாளர் முனைவர் சந்தானலட்சுமி வழங்கினார். நிறைவாக முனைவர் சு. பாலாஜி நன்றியுரை வழங்கினார்.