பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன் அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர் வியாழக்கிழமை மாலை அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், விளைப் பொருள்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலையை வழங்கி, மானியத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள் நான்கையும் திரும்பப் பெற வேண்டும். விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அரசு மற்றும் பொதுத் துறைகளில் காலியாக உள்ள 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலர் டி.தண்டபாணி, தொமுச மாவட்டச் செயலர் ஆர்.மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலர் பி.துரைசாமி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் டி.விஜயகுமார், எச்எம்எஸ் மாநில செயற்குழு உறுப்பினர் மா.மு.சிவக்குமார் ஆகியோர் தலைமை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.