ராஜபாளையம் எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் வணிகவியல் கணினி பயன் பாட்டுத்துறை சார்பாக மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.
இதில் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 146 மாணவ ,மாணவிகள் பங்கு பெற்றன.குறும் படம், போட்டோ கிராபி,பேப்பர் ப்ரசெண்டேஷன் , போஸ்டர் ப்ரசெண்டேசன் , நடனம் போன்ற பல்வேறு போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக வன்னிய பெருமாள் கல்லூரி உதவி பேராசிரியர் நந்தினி கலந்து கொண்டு டிஜிட்டல் மாற்றம் இளைஞர்களை புதிய நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் ,தொழில் வாய்ப்புகள் மற்றும் சமூக மாற்றங்களுக்கு தயாராக்குகிறது என்று சிறப்புரையாற்றினார்.
மாணவி கீதாஞ்சலி வரவேற்புரையாற்றினார்.கல்லூரி முதல்வர் லட்சுமி தலைமை உரையாற்றினார்.கல்வி ஆலோசகர் சங்கரநாராயணன் வாழ்த்துரை வழங்கினார்.உதவி பேராசிரியர் ரேவதி அறிமுக உரையாற்றினார்.மாணவி சக்தி நன்றியுரை கூறினார்.