கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியும் (ICT Academy & Infosys Foundation) நிறுவனமும் இணைந்து நடத்திய தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பயிற்சி அறிமுக விழா.

அறிஞர் அண்ணா கல்லூரியும், ICT Academy & Infosys Foundation நிறுவனமும் இணைந்து நடத்திய அறிமுக விழா (06.02.2025) அன்று வணிக கணினி பயன்பாட்டியல் துறை மாணவ மாணவியர்களுக்கு நடைபெற்றது. கல்லூரியின் கணினி அறிவியல் துறை தலைவியும் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா. இராஜலட்சுமி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. தனபால் அவர்கள் தலைமை தாங்கினார். தன்னுடைய தலைமை உரையில், மாணவ மாணவிகள் மாறிவரும் காலகட்டத்திற்கு ஏற்ப கணினி தகவல் தொழில்நுட்ப பயிற்சி முகாமில் பங்கேற்று, எதிர்காலத்தில் சிறப்பான சாதனைகளை செய்ய வேண்டும். நிறைய மின்- வணிகம் சார்ந்த அனுபவங்களை கற்றுக் கொள்வதற்கு உடல்நலம் மற்றும் மனநலத்திற்கு முக்கியத்துவம் தருதல் வேண்டும் என்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக ICT Academy oF Tamilnadu மூத்த மேலாளர் நா .பால முரளி, தகவல் தொழில்நுட்ப தொழில் மேலாளர் மற்றும் கல்வி சார் செயல்பாட்டாளர் திரு. பா.சந்துரு, மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு .த. விஜய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரை மூலமாக, மாணவ மாணவியர் திறமைகளை வளர்த்தல், பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு பயிற்சி அளித்தல், இளம் தொழில் முனைவோர்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு கருத்துக்களை விரிவாக எடுத்துரைத்தனர்.

மென் திறன் மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர்களான திரு .கருணை வேந்தன் , ஜோதி கிருஷ்ணன் ஆகிய இருவரும்(B.COM.C.A., ) மாணவ மாணவியர்களுக்கு மிகச் சிறப்பான முறையில் பயிற்சி அளித்தனர். கல்விப் புல ஒருங்கிணைப்பாளர் முனைவர் மா .ஜெகன் அவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்று சிறப்பித்தார் . வணிகவியல் துறையின் உதவிப் பேராசிரியை முனைவர் கு.விமலா கலந்து கொண்டார்.நிறைவாக கல்லூரியின் கணினி செயற்கை தரவு நுண்ணறிவியல் துறை தலைவர் திரு .மு.முருகதாஸ் அவர்கள் தகவல் தொழில்நுட்ப நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்
பாளராக செயல்பட்டு, இறுதியாக நன்றி கூறினார்.

Share this to your Friends