திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் 6ம் நாள் நிகழ்வாக சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வரவேற்புரை முதுகலை ஆங்கில ஆசிரியர்.ராமுசெல்வம் வழங்கினார்.
பள்ளி தலைமையாசிரியர்.சுதா தலைமையில் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்.முத்துராமன் மற்றும் இப்பள்ளி முன்னாள் பொறுப்பு தலைமையாசிரியர் மற்றும் திட்ட அலுவலர் ராமர் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். சாலைப்பாதுகாப்பு பற்றிய விரிவான விளக்க உரையை சிறப்பு விருந்தினர்
காவல் போக்குவரத்து ஆய்வாளர்.ஜெய்சிங் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் துணை ஆய்வாளர்.கவிதா தற்போது பழனி வட்டாரத்தில் நடந்து வருகின்ற விபத்துக்கள், அவ்விபத்து ஏற்பட காரணங்களாக அமைந்தவைகளை மாணவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துக்கூறினர். மேலும் இப்பள்ளி மூத்த முதுகலை ஆசிரியர்.இளங்கோ நன்றியுரையாற்றினார்.