தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதல் குறித்த விழிப்புணர்வு முகாம்.
“இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதலும், மாணவர்களுக்கான எதிர்வினைகளும்” என்ற தலைப்பில் மதுரை வேலம்மாள் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் இணையவழி விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மாணவ-மாணவிகளிடையே சிறப்புரை யாற்றினார்.
மேலும் இம்முகாமில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினர்கள், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் , காவல் அதிகாரிகள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள் கலந்தது கொண்டனர்.