ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட காமாட்சி செட்டியார் தெருவில் அமைதிருக்கும் பெண்கள் சுகாதார வளாகம் நீண்ட நாள்களாக பயன்பாடு இல்லாமல் பூட்டி கிடந்தது தற்போது அனைத்து வசதிகளும் கொண்டு சீரமைத்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் திறக்காமல் காட்சி பொருளாக மட்டும் இருந்து வருகிறது

இந்த பெண்கள் சுகாதார வளாகத்தினால் காமாட்சி செட்டியார் தெரு சேர்மன் செட்டியார் தெரு கிருஷ்ணன் கோவில் தெரு கடலாடி செட்டியார் தெரு சுப்பையா தேவர் காலனி போன்ற அனைத்து தெருக்களில் உள்ள மக்களுக்கு இதுதான் சுகாதார வளாகம் ஆகவே மாவட்ட நிர்வாகமும் பேரூராட்சி நிர்வாகமும் இதை கவனத்தில் கொண்டு விரைவில் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Share this to your Friends