சீர்காழியில் தலயின் ரசிகர்கள், தளபதியின் தொண்டர்கள் என வைக்கப்பட்ட விடாமுயற்சி பட பேனர் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பாலாஜி திரையரங்கில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று திரையிடப்பட்டுள்ள நிலையில் திரையரங்கு வாசலில் அஜித் ரசிகர்கள் பேனர்கள் வைத்தும் அரசியல் வேண்டாம் அஜித்தே போதும் என சுவரோட்டிகள் ஒட்டியுள்ள நிலையில் தமிழக வெற்றிக்கழகம் சேந்தங்குடி கிளை என அச்சிட்டு தலயின் ரசிகர்கள் தளபதியின் தொண்டர்கள் என்ற வாசகத்துடன் நடிகர்கள் விஜய் அஜித் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்துடன் 40 அடி நீளத்திற்கு டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இதை பொதுமக்கள் ஆர்வமாக பார்த்து செல்கின்றனர்.மேலும் திரையரங்கு முன்பு ரசிகர்கள் ஆரவாரத்துடன் கேக் வெட்டியும் நடனம் ஆடியும் அஜித் மற்றும் முன்னனி நடிகர்கள் நடித்து வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைபடத்தை கொண்டாடி வருகின்றனர்.